Header image alt text

எதிர்வரும் ஜுலை மாதத்திலோ அல்லது அதற்கு முன்னதாகவோ பேருந்து கட்டணச் சலுகைகளை மக்களுக்கு வழங்க முடியும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். Read more

அபிவிருத்தி குன்றிய நாடுகள் தொடர்பிலான  ஐக்கிய நாடுகள் சபையின் ஐந்தாவது மாநாடு தற்போது கட்டாரின் டோஹா நகரில் இடம்பெற்று வருகின்றது. இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளார். குறித்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ள இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, கட்டார் அரசாங்கத்தின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் சுல்தான் பின் அல் சாத் முராய்க்கியை சந்தித்துள்ளார். Read more

தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அரசியலமைப்பு சபை எதிர்வரும் 9ஆம் திகதி மீண்டும் கூடும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். உறுப்பினர்கள் நியமனம் தொடர்பான சில முக்கிய தீர்மானங்கள் அங்கு எடுக்கப்பட உள்ளதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.