நீண்டகாலமாக, புளொட் அமைப்பின் தலைமை பற்றியும் ஏனைய கழக உறுப்பினர்கள் பற்றியும் முகப்புத்தக தளத்தில் பொய்யான, கேவலமான பதிவுகளை வெளிப்படுத்தி வரும் ‘ரகு பரன்’ எனும் பெயரிலான பக்கத்தின் நிர்வாகிக்கும் புளொட் அமைப்புக்கும் எதுவிதமான சம்பந்தமும் கிடையாது என்பதை அறியத் தருகிறோம்.
குறிப்பாக, அண்மைய நாட்களில், கட்சியின் பெண் வேட்பாளரான கழகத் தோழர் ஒருவரை அச்சுறுத்தியமையையும், சக போராட்ட அமைப்புத் தலைவர் ஒருவரின் குடும்ப உறுப்பினர்கள் குறித்து வெளிவந்திருந்த அநாகரீகமான பதிவுகளையும் நாம் முற்றாக வெறுப்பதுடன், இவ் விடயங்கள் குறித்த சட்ட ரீதியான நடவடிக்கைகள் எதற்கும் நாம் எதிர்ப்பில்லையென்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தலைமையகம்
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)
07.03.2023