உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடத்த திட்டமிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார். தற்போதுள்ள நிலைமையின் அடிப்படையில், இந்த திகதிகளில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்குச்சீட்டுகள் அடங்கிய பாதுகாப்பு பொதிகளை எதிர்வரும் 21 ஆம் திகதி தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்துவதற்குரிய வர்த்தமானியை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களூடாக வௌியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.