தொல்பொருள் ஆலோசனைக் குழுவிற்காக புதிய உறுப்பினர்களை நியமித்து புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவினால் அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. இரண்டு வருட காலப்பகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ள இந்த குழுவின் மூலம் தொல்பொருள் பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன.

19 உறுப்பினர்கள் அடங்கிய இந்த குழுவில் அஸ்கிரி பீடத்தின் அனுநாயக்க வெண்டருவே உபாலி தேரர், கலாநிதி பஹமூனே சுமங்கல தேரர், எல்லாவெல மேதானந்த தேரர் மற்றும் பேராசிரியர் இந்துராகரே தம்மரத்ன தேரர் உள்ளிட்டோர் அடங்குகின்றனர்.

யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் பி.புஷ்பரத்னம், யாழ்.பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தர் பேராசிரியர் பாலசுப்ரமணியம் பிள்ளை, கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் அதிபர் A.R.மரிக்கார் மொஹம்மட் ரிஸ்வி ஆகியோரும் இந்த குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.