Header image alt text

பாதுகாப்பு சபையின் கூட்டம் காரணமாகவே உள்ளூராட்சி சபை தேர்தல் நிதியொதுக்கம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் நிதியமைச்சின் செயலாளர் பங்கேற்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் கூறப்பட்ட கூற்றுகளை உயர்மட்ட தரப்புக்கள் மறுத்துள்ளதாக நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, தேர்தல்கள் ஆணைக்குழுவை சந்திப்பதற்கான வேறொரு திகதியை அறிவிக்குமாறு நிதியமைச்சின் செயலாளரினால் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. Read more

2023ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை விடுவிக்குமாறு இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழு நிதி அமைச்சரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இது தொடர்பான கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளமையை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா உறுதிப்படுத்தியுள்ளார். Read more

புதிதாக ஸ்தாபிக்கப்படவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு சபைக்கான விண்ணப்பத்தை தாம் சமர்ப்பித்துள்ளதாக அதன் தற்போதைய தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தமது விண்ணப்பத்தை அரசியலமைப்பு பேரவைக்கு தாம் சமர்ப்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்புரிமைக்காக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரியவும் முன்னதாக விண்ணப்பித்திருந்தார்.

துறைநீலாவணையில் 12.03.1986இல் மரணித்த தோழர்கள் மாமா (முருகேசு ஸ்ரீதரன் – துறைநீலாவணை-08), கதிரவேல்(விசு), புலேந்திரன்(ரகுபதி), தருமன், தவராசா ஆகியோரின் 37ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..

12.03.1984இல் மரணித்த தோழர் சாந்தன் (நகுலநாதன் – முருங்கன்) அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…..