கிளிநொச்சி நகரப் பகுதியில் 12.03.2023 நடைபெற்ற, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் கிளிநொச்சி மாவட்ட பொதுச்சபை உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் மாவட்ட நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கட்சியின் பிரதேச அமைப்பாளர்களும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

மாவட்ட செயலாளராக தோழர் வே. சிவபாலசுப்ரமணியம் (மணியம்) அவர்களும் மாவட்டப் பொருளாளராக தோழர் நித்தியானந்தன் (துரை) அவர்களும் மாவட்ட மகளிர் பிரிவு அமைப்பாளராக தோழர் கோ.பிரசாந்தினி அவர்களும் மாவட்ட இளைஞர் பிரிவு அமைப்பாளராக தோழர் பிரேம்நாத் அவர்களும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
கரைச்சிப் பிரதேச அமைப்பாளராக தோழர் சிவராஜா அவர்களும், பச்சிலைப்பள்ளி பிரதேச அமைப்பாளராக தோழர் சிவராசா (சின்னவன்) அவர்களும், பூநகரிப் பிரதேச அமைப்பாளராக தோழர் க. நவரத்தினராசா (ராஜா) அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
மாவட்ட நிர்வாகத் தெரிவின் போது, கட்சியின் செயலாளர் நா.இரட்ணலிங்கம் (குரு), பொருளாளர் தோழர் க. சிவநேசன்(பவன்), தேசிய அமைப்பாளர் தோழர் ஆ. சிறீஸ்கந்தராஜா (பீற்றர்), நிர்வாகச் செயலாளர் தோழர் ம. பத்மநாதன்(பற்றிக்), இளைஞர் பிரிவு பொறுப்பாளர் ஜூட்சன் ஆகியோரும் உடனிருந்தனர்.
தலைமையகம்
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)
13.03.2023