தொழில்வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு உள்ளிட்ட மேலும் பல தொழிற்சங்கங்கள் இன்று(13) முதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளன. புதிய வரி கொள்கைக்கு எதிராக இந்த பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுகாதாரம், கல்விச்சேவை, நீர் விநியோகம், மின்சாரம், தாதிமார், ஆசிரியர் சேவை உள்ளிட்ட 40 தொழிற்சங்கங்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் பங்கேற்றுள்ளன.

அரச மருத்துவ அதிகாரிகள் இன்று(13) ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு மேல், தெற்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படுகின்றது.