உள்ளூராட்சி மன்றங்களின் புதிய பதவிக்காலம் தொடர்பில் அறிவிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அமைச்சின் அதிகாரிகள் ஆகியோருடன் கலந்தாலோசித்து உரிய திகதி அறிவிக்கப்படும் என பிரதமர் கூறியுள்ளார்.

இதனிடையே, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பயன்படுத்திய அனைத்து அரச சொத்துக்களையும் எதிர்வரும் 19ஆம் திகதிக்கு முன்னர் உரிய நிறுவனங்களிடம் ஒப்படைக்குமாறு உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 19ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நிறைவடைந்ததன் பின்னர், அவற்றின் நிர்வாகம், மாநகர ஆணையாளர்கள் மற்றும் பிரதேச சபை செயலாளர்களுக்கு மாற்றப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் 19ஆம் திகதிக்கு பின்னர் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக புனரமைப்பு பணிகள் மாத்திரமே மேற்கொள்ளப்படும் என இராஜாங்க அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.