முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் P.H.பியசேன, அம்பாறை – அக்கரைப்பற்றில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார். அக்கரைப்பற்றில் இன்று காலை இடம்பெற்ற விபத்தின் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, அவர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் P.H.பியசேன பயணித்த மோட்டார் சைக்கிள் தனியார் பஸ் ஒன்றுடன் மோதி இன்று காலை 7.30 அளவில் விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் சடலம் கல்முனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று பொலிஸார் விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.