சுமார் 40 அரச நிறுவனங்களை மூடுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். பொதுமக்களுக்கான சேவைகள் குறைந்த மட்டத்தில் காணப்படும் அரச நிறுவனங்களை மூடுவது குறித்தே கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். செலவுகளை முகாமைத்துவம் செய்தல் மற்றும் வினைத்திறனை அதிகரித்தல் ஆகிய இலக்குகளை அடைய இதனூடாக எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். Read more