வவுனியா குடியிருப்பைப் பிறப்பிடமாகவும் நெளுக்குளத்தை வதிவிடமாகவும் கொண்டவரும், எமது கட்சியின் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர் தோழர் யோகன் (தர்மலிங்கம் யோகராஜா) அவர்களின் அன்புச் சகோதரியுமான திருமதி. சுப்பிரமணியம் சகுந்தராதேவி (குஞ்சு) அவர்கள் இன்று (17.03.2023) இயற்கையெய்தினார்.

அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு அன்னார்க்கு எமது இதயபூர்வ அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
17.03.2023
தொடர்புகட்கு: 0770261199 (யோகன்)