ஜேர்மனியில் வசிக்கும் திருமதி தர்மினி சிவகுமாரன் அவர்களின் 60ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கழகத்தின் ஜெர்மன் கிளையின் அனுசரணையில் 50,000/- நிதியில் முல்லைத்தீவு (ரெட்பானா) வள்ளுவர்புரம் மகளிர் அமைப்புக்கு சுழற்சி முறைக் கடன் திட்டத்தின் அடிப்படையில் நிதியுதவியும், வள்ளுவர்புரம் கார்த்திகா முன்பள்ளியினுடைய விளையாட்டுப் போட்டிக்கான பதக்கங்கள் மற்றும் பரிசுப் பொருட்களும் கழகத்தின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடக இன்று (19.03.2023) வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கட்சியின் பொருளாளர் க.சிவநேசன்(பவன்), கட்சியின் இளைஞர் பிரிவு பொறுப்பாளர் யூட்சன், கட்சியின் மாவட்ட அமைப்பாளர் தவராஜா மாஸ்டர், கட்சியின் மாவட்ட செயலாளர் சிவலிங்கம் மாஸ்டர், கட்சியின் மாவட்ட மகளிர் பிரிவு பொறுப்பாளர் கேதினி, புதுக்குடியிருப்பு பிரதேச மகளிர் பொறுப்பாளர் சுகிர்தா ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.