Header image alt text

தேசிய பாடசாலைகளின் வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் கல்வி அமைச்சு புதிய தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. இதற்கமைய, கல்வி பொது தராதர சாதாரண தர மற்றும் உயர் தர கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்களின் இடமாற்றத்தினால் மாணவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமானால், அது தொடர்பில் அதிபரால் சமர்ப்பிக்கப்படும் மேன்முறையீட்டை விசேட மேன்முறையீட்டுக் குழுவின் மூலம் பரிசீலிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more

இலங்கைக்கான கடன் உதவிக்கு நிறைவேற்றுக்குழு அனுமதியளித்துள்ள நிலையில், உடனடியாக 333 மில்லியன் டொலர் கடனை வழங்க முடியுமென சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. 48 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ள திட்டத்தின் கீழ், 3 பில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு நேற்று (20) அங்கீகாரம் வழங்கியது. Read more

இலங்கைக்கான கடன் வசதிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு அனுமதி வழங்கியுள்ளமையை அமெரிக்கா வரவேற்றுள்ளது. இதுவொரு நல்ல செய்தி என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ( Julie Chung) ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த தீர்மானமானது நாட்டின் பொருளாதார மீட்சிக்கான முக்கியமான நகர்வு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். Read more