இலங்கைக்கான கடன் வசதிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு அனுமதி வழங்கியுள்ளமையை அமெரிக்கா வரவேற்றுள்ளது. இதுவொரு நல்ல செய்தி என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ( Julie Chung) ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த தீர்மானமானது நாட்டின் பொருளாதார மீட்சிக்கான முக்கியமான நகர்வு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை மக்கள் அனைவரும் செழிப்பாக வாழ்வதை உறுதிப்படுத்துவதற்கு, நல்லாட்சி, வெளிப்படைத்தன்மையைக் குறிக்கும் கட்டமைப்பு மற்றும் நீடித்த சீர்திருத்தங்கள் முக்கியமானவை என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் குறிப்பிட்டுள்ளார்.