வவுனியா மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் இன்று கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக 2222 ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபடும் நிலையில், இன்று அவர்கள் கவனயீர்ப்பிலும் ஈடுபட்டனர். இதன்போது, அரிக்கேன் விளக்குகளை கையில் ஏந்தியவாறு சர்வதேசம் தங்களின் பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.