இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார். இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சின் செயலாளர் பன்கஜ் ஜேன் உள்ளிட்ட குழாத்தினரும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். சூரிய சக்தியில் இயங்கும் 500 வீட்டு சமையல் சாதனங்கள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டதாக லங்கா IOC அதன் ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது. Read more