முன்னாள் சபாநாயகரும் முன்னாள் அமைச்சருமான ஜோசப் மைக்கல் பெரேரா காலமானார். 82 ஆவது வயதில் அன்னார் தனது இல்லத்தில் இன்று காலமானார். இலங்கை பாராளுமன்றத்தின் 17 ஆவது சபாநாயகராக ஜோசப் மைக்கல் பெரேரா செயற்பட்டார். 1964 ஆம் ஆண்டு முதல் 1976 ஆம் ஆண்டு வரை ஜா-எல நகர சபையை பிரதிநிதித்துவப்படுத்திய அன்னார், அங்கு தலைவர் உள்ளிட்ட பல பதவிகளையும் வகித்திருந்தார்.
அவர், 1978 ஆம் ஆண்டு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் முதலாவது பாராளுமன்றத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.
அன்று முதல் 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் திகதி வரை பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர், சபாநாயகர் உள்ளிட்ட பதவிகளை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.