
இதன்போது கட்சி, மத பேதமின்றி எல்லோரும் இப்போராட்டத்தில் ஒன்றிணைய வேண்டும் எனவும் முன்னுதாரணமாக இப்போராட்டம் வவுனியாவில் நடைபெறுகின்றபோதிலும் வடகிழக்கில் மட்டுமல்லாது இலங்கை முழுவதிலும் இப்போராட்டத்தினை விஸ்தரிக்க வேண்டும் எனவும் தமிழர்களின் இருப்பை இல்லாமற் செய்கின்ற நடவடிக்கைகள் இன்று நேற்றல்ல நீண்டகாலமாகவே தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதை முற்றுமுழுதாக எதிர்த்து அதற்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் உட்பட சகல வழிகளிலும் எல்லோரும் ஒன்றிணைந்து எதிர்ப்பினை முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து முன்னெடுப்போம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



