எரிபொருள் விநியோகத்திற்கு இடையூறு விளைவித்த தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை வழங்குவதற்கு பெட்ரோலியக் கூட்டுத்தாபன முகாமைத்துவம் தீர்மானித்துள்ளது.

பெட்ரோலியக் கூட்டுத்தாபன வளாகம் மற்றும் பெட்ரோலியக் களஞ்சிய முனையங்கள் ஆகியவற்றினுள் பிரவேசிப்பதற்கும் குறித்த தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய அனைத்து அதிகாரிகளும் கடமைக்கு சமூகமளித்து, எரிபொருள் விநியோகம் மற்றும் ஏனைய கடமைகளை முன்னெடுக்குமாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.