Header image alt text

இலங்கையில் கடுமையான குடியியல் மற்றும் அரசியல் உரிமை மீறல்களை சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு இலங்கை அரசாங்கத்திடம் 60க்கும் மேற்பட்ட பரிந்துரைகளை செய்துள்ளது. இந்தநிலையில் மனித உரிமைகளுக்கான சர்வதேச கூட்டமைப்பு மற்றும் மனித உரிமைகள் மற்றும் மேம்பாட்டு மையம் ஆகியவை இந்த பரிந்துரைகளை வரவேற்றுள்ளன. Read more

வவுனியா – வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் விளைவிக்கப்பட்ட சேதம் குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்த ஜனாதிபதி, தொல்பொருள் திணைக்களத்துடன் வவுனியாவிலும், கொழும்பிலும் இரண்டு சந்திப்புக்கள் நடத்தப்பட்டுள்ளன. Read more

இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு 13 ஆம் திருத்தச் சட்டத்திற்கு அப்பாலான அதிகாரப் பகிர்வு அவசியமாகும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். உடனடி மாற்றத்திற்கான அமைப்பினால் நேற்றுமுன்தினம் (29) ஏற்பாடு செய்யப்பட் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.சிறுபான்மை மக்களின் இனப்பிரச்சினைக்கு அரசியலமைப்பு ரீதியான நிரந்தர தீர்வு அவசியமாகும். Read more

பொதுநிர்வாகம் உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சின் புதிய செயலாளராக கே.டி.என் ரஞ்சித் அசோக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 21 ஆம் திகதி அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலாளரின் கையொப்பத்துடன் வெளியான வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more