Posted by plotenewseditor on 30 April 2023
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 30 April 2023
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 30 April 2023
Posted in செய்திகள்
X-Press Pearl கப்பலால் இலங்கையின் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கான நஷ்ட ஈடு உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய விரிவான அறிக்கை இதுவரை தயாரிக்கப்படவில்லை என கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கையை எவ்வாறு தயாரிப்பது என்பது தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக சட்ட மா அதிபருடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் கோரியுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் அசேல B.ரெக்கவ குறிப்பிட்டுள்ளார். Read more
Posted by plotenewseditor on 30 April 2023
Posted in செய்திகள்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்கிய அரச ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் கிடைக்காவிடில் அது தொடர்பில் தமது அமைச்சிற்கு தெரியப்படுத்துமாறு உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. தேர்தலில் போட்டியிட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு அமைச்சரவை அங்கீகாரத்தின் பிரகாரம் அடிப்படை சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் அவை உரிய வகையில் வழங்கப்படவில்லை என தகவல் கிடைத்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 30 April 2023
Posted in செய்திகள்
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடுவதற்கு நீதி அமைச்சு தீர்மானித்துள்ளது. குறித்த சட்டமூலம் தொடர்பில் எதிர்வரும் 9 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பாராளுமன்ற வாரத்தில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி, கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 29 April 2023
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 29 April 2023
Posted in செய்திகள்
சீனாவின் நிதியுதவியின் கீழ் கொழும்பில் குறைந்த வருமானம் பெறுவோருக்காக புதிய வீடமைப்பு திட்டங்களை நிர்மாணிக்க நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. 450 மில்லியன் டொலர் நிதியுதவியை சீனா இதற்காக வழங்கவுள்ளது. கொழும்பின் 5 இடங்களில் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் W.S. சத்யானந்த தெரிவித்தார் Read more
Posted by plotenewseditor on 28 April 2023
Posted in செய்திகள்
வவுனியா – வெடுக்குநாறி மலையில் மீண்டும் விக்கிரகங்கள் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டன. ஆலய நிர்வாகத்தினர், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர். மாவட்ட தொல்பொருள் திணைக்களத்தினரும் நெடுங்கேணி பொலிஸாரும் வெடுக்குநாறி மலைக்கு சென்றிருந்தனர். சிவலிங்கம், அம்மன், முருகன், பிள்ளையார், வைரவர், நாகதம்பிரான் உள்ளிட்ட விக்கிரகங்கள் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டன. Read more
Posted by plotenewseditor on 28 April 2023
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 28 April 2023
Posted in செய்திகள்
கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் இடைநிறுத்தப்பட்ட இலகுரக ரயில் செயற்றிட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த விசேட நிபுணர்களின் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த செயற்றிட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான யோசனை நிதியமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அமைச்சின் தேசிய செயற்பாட்டு மையத்தினால் இந்த விடயம் தொடர்பாக அறிக்கை கோரப்பட்டுள்ளது. Read more