அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம் எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக்கொடுக்கப்படும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்கான ஓய்வூதிய கொடுப்பனவு மற்றும் சமுர்த்தி கொடுப்பனவு என்பனவற்றையும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
இதற்காக 135 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.