Header image alt text

வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் ஆராய்வதற்காக சிரேஷ்ட சட்டத்தரணிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சட்டமூலத்தில் சிக்கல்கள் காணப்படுவதாக குறித்த குழு பரிந்துரைக்கும் பட்சத்தில் அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன தெரிவித்தார். Read more

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 03 பேர் வவுனியா மேல் நீதிமன்றத்தால் இன்று(03) விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வவுனியா மேல் நீதிமன்றத்தில் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று(03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே பிரதிவாதிகள் மூவரும் விடுவித்து விடுதலை செய்யப்பட்டனர். Read more

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரின் ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸாரால் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு நகர மண்டபத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதே இவ்வாறு நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.