Header image alt text

வேதனமல்லா விடுமுறையின் கீழ், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அரச பணியாளர்களுக்கான அடிப்படை வேதனத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறித்த வேதனம் எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். Read more

தலைமன்னாரில் இருந்து தமிழகம் தனுஷ்கோடி வரை ‘ராமர்பாலம்’ பகுதி ஊடாக கப்பல் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பது தொடர்பிலும் ஆன்மீக சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது சம்பந்தமாகவும் விசேட கலந்துரையாடலொன்று இன்று (04) இடம்பெற்றுள்ளது. துறைமுகங்கள் கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தலைமையில் இ.தொ.காவின் பொதுச்செயலாளரும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் பங்குபற்றலுடன் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் இந்திய துணை உயர்ஸ்தானிகரும் இந்திய முதலீட்டாளர்களும் பங்கேற்றிருந்தனர். Read more

அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று(04) முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 17 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. தமிழ் – சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கு இவ்வாறு விடுமுறை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

50 வருட கால இடைவெளியின் பின்னர் நிலவிற்கு அனுப்பவுள்ள விண்வௌி வீரர்களை நாசா நிறுவனம் பெயரிட்டுள்ளது. அதற்காக 04 விண்வெளி வீரர்களின் பெயர்களை நாசா நிறுவனம் அறிவித்துள்ளது. அவர்களில் பெண்ணொருவரும் கறுப்பினத்தவர் ஒருவரும் உள்ளடங்குகின்றனர். கிறிஸ்டினா கோச்(Christina Koch) என்பவர் நிலவிற்கு பயணிக்கவுள்ள முதலாவது பெண் விண்வெளி வீராங்கனையாக பதிவாகவுள்ளார். Read more