ஊழலுக்கு எதிரான சட்டமூலம் வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது. சொத்துகளுடன் தொடர்புடைய இலஞ்சம், ஊழல் மோசடி குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை கண்டறியவும் விசாரணை செய்யவும் வழக்கு தொடரவும் சுயாதீன ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான சந்தர்ப்பம் இதனூடாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஊழல் மோசடிகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை விஸ்தரிப்பதும் மக்களுக்கான தௌிவூட்டலை மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.