X-Press Pearl கப்பல் கடலில் மூழ்கியதால், கடற்றொழிலில் ஈடுபட தடை விதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள கடற்றொழிலாளர்களுக்கு நட்ட ஈடு வழங்க மேலும் 1,514 மில்லியன் ரூபா நிதி கிடைத்துள்ளது. கப்பலின் காப்புறுதி நிறுவனத்தினால் இந்த நிதி திறைசேரிக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
நான்காம் கட்டத்தின் கீழ் கம்பஹா, கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்ட மீனவர்களுக்கு இந்த நிதி பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது.
16,867 குடும்பங்கள் இந்த நட்ட ஈட்டை பெற்றுக்கொள்ளவுள்ளனர்.
நாட்டின் கடற்றொழிலில் மறைமுகமாக ஈடுபடும் குடும்பங்களுக்கும் இந்த நட்ட ஈடு வழங்கப்படவுள்ளது.
நான்காவது கட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகையுடன், மொத்தமாக 3000 மில்லியன் ரூபா நிதி கடற்றொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்டதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் 3,30,000 ரூபா முதல் 5,00,000 வரையிலான தொகை, மீனவர் ஒருவருக்கு நட்ட ஈடாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.