உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயக் குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் 02 நாட்களுக்குள் பிரதமரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் குறித்த அறிக்கையை சமர்பிக்கவுள்ளதாக உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயக் குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய தெரிவித்துள்ளார்.

அறிக்கை சமர்பிக்கப்பட்டதன் பின்னர் அது தொடர்பில் விசேட ஊடக சந்திப்பை நடத்தி பொதுமக்களை தௌிவூட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

உள்ளூராட்சி மன்றங்களில் தற்போது 8000 ஆக காணப்படும் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை குறைப்பதே உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயக் குழுவின் நோக்கமாகும்.