உள்ளூராட்சி நிறுவனங்களின் எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கை பிரமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரியவினால் பிரதமர் அலுவலகத்தில் இன்று(11) காலை கையளிக்கப்பட்டதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி நிறுவனங்களின் எல்லை நிர்ணயக் குழு கடந்த வருடம் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய உள்ளிட்ட நால்வர் இந்த குழுவில் அடங்குகின்றனர்.
உள்ளூராட்சி நிறுவனங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8000 இலிருந்து 4000 ஆக குறைப்பதற்காக இந்த குழு நியமிக்கப்பட்டது.