பொருளாதார நெருக்கடியைக் கையாள்வதில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இந்தியா உறுதியளித்துள்ளது. இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான உயர்மட்ட சந்திப்பில் கலந்துகொண்டபோது, இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதனை தெரிவித்தார்.
கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளில் அனைத்து கடன் வழங்குநர்களையும் கையாள்வதில் வெளிப்படைத்தன்மையும் சமத்துவத்தை உறுதிப்படுத்த கடன் வழங்குநர்களுக்கிடையில் ஒத்துழைப்பும் முக்கியமானது என அவர் வலியுறுத்தினார்.