சீனாவினால் மியான்மரில் உள்ள கோகோ தீவுகளில் இராணுவ வசதி ஒன்று நிர்மாணிக்கப்படுகின்றமை மற்றும் இலங்கையில் முன்மொழியப்பட்ட தொலைதூர செயற்கைக்கோள் தரை நிலைய அமைப்பு என்பனவற்றின் செயற்பாடுகள் பிராந்தியத்தின் பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இந்தியா கவலை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கு மிக அருகில் அமைந்துள்ள கோகோ தீவுகளில் சீனாவின் இராணுவ வசதிகள் கட்டப்படுவதை அண்மைய செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. அதேநேரம் சீன அறிவியல் கல்லூரியின் கீழ் உள்ள விண்வெளி தகவல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தென்னிலங்கையில் உள்ள ருஹூனு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியின் மூலம் தொலைதூர செயற்கைக்கோள் பெறும் தரை நிலைய அமைப்பை அமைக்க சீனா முன்மொழிந்துள்ளதாக ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில் குறித்த இரண்டு முயற்சிகளும் இந்தியாவின் முக்கிய இடங்களை உளவு பார்க்கவும்இ முக்கியமான தகவல்களை இடைமறிக்கவும் மற்றும் பிராந்தியம் முழுவதும் பயன்படுத்தப்படலாம் என்று இந்திய பாதுகாப்பு தரப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன