அனைத்து மாவட்டங்களிலும் அமைதியை பேணுவதற்காக முப்படையினரை கடமைகளில் ஈடுபடுத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 40 ஆம் அத்தியாயத்தின் 12 ஆம் பிரிவினால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இந்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்று முதல் அமுலாகும் வகையில், நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அமைதியை பேணுவதற்காக முப்படையினரும் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
ஒவ்வொரு மாதமும் தொடர்ச்சியாக இந்த வர்த்தமானி அறிவித்தல் புதுப்பித்து வௌியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.