யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் உள்ள வீடொன்றில் ஐவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் மற்றுமொரு பெண்ணும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். குறித்த பெண் படகு மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
3 பெண்களும் இரண்டு ஆண்களுமே கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களா என்பது குறித்து தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் கூறினர்.
சடலங்கள் நீதவான் விசாரணைகளுக்கான குறித்த பகுதியிலேயே வைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுந்தீவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.