மட்டக்களப்பு எரிவில் பகுதியைச் சேர்ந்த வறுமைக்கோட்டின் கீழுள்ள 40 மாணவர்களுக்கு இன்று (23.04.2023) 120,000/- பெறுமதியில் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார் அவர்கள் தனது தந்தையாரான வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் ஏழாமாண்டு நினைவுதினத்தை முன்னிட்டு வழங்கிய நிதியில் இவ்வுதவி வழங்கப்பட்டது.
எருவில் அறநெறிப் பாடசாலை ஆசிரியை சுஜாத்தா தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வின்போது, அமரர் வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களுக்கான ஆத்மசாந்திப் பிரார்த்தனையைத் தொடர்ந்து ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் சமுக மேம்பாட்டுப் பிரிவுப் பொறுப்பாளர் ந. ராகவன், கழகத்தின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ம. நிஸ்கானந்தராஜா, இவ் நிகழ்வை ஒழுங்கு செய்த மஞ்சு, சிறி ஆகியோர் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தனர்.