சுவிஸ்லாந்தில் வசிக்கும் திரு திருமதி வசீகரா சுஜாவதி தம்பதிகள் தங்கள் புதல்வி கரிஸ்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அனுப்பி வைத்த 35,000/- ரூபாய் நிதியில் கழகத்தின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக முல்லைத்தீவு நாவற்காடு சந்திரன் முன்பள்ளி சிறார்களுக்கான பொருட்கள், வற்றாப்பளை அரும்பு மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர்க்கு 10 கதிரைகள் மற்றும் சிறுநீரக நோயாளர்கள் மூவருக்கான உலருணவுப் பொதிகள் என்பன இன்று (24.04.2023) திங்கட்கிழமை வழங்கிவைக்கப்பட்டன.
வற்றாப்பளையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சியின் பொருளாளர் க.சிவநேசன்(பவன்), கட்சியின் இளைஞர் பிரிவு பொறுப்பாளர் யூட்சன், கலைஞர் தவராஜா, ஆசிரியர் மயூரன், கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் புஸ்பராஜா, முன்பள்ளி ஆசிரியர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது கரிஸ்மா அவர்களின் பிறந்தநாள் நிகழ்வாக கேக் வெட்டி
வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு குளிப்பானம், சிற்றுண்டி என்பனவும் வழங்கப்பட்டது.