ஹம்பாந்தோட்டை கடற்பகுதியில் இன்று(24) அதிகாலை 12.45 அளவில் 4.4 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது ஹம்பந்தாட்டை பகுதியிலிருந்து 25.8 கிலோமீட்டர் தொலைவில் தென்மேற்கு கடலில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணிகயத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் பிரேம தெரிவித்துள்ளார்.

இதனால் நாட்டிற்கு எவ்வித பாதிப்பும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் ஆகியன தெரிவித்துள்ளன.