ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார் அவர்கள் தனது தந்தையாரான வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் ஏழாமாண்டு நினைவுதினத்தை முன்னிட்டு வழங்கிய 25,000/- நிதியில் நுவரெலியா மாவட்டம் தலவாக்கலை ஆக்ரா தோட்டத்து அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு இன்று (29.04.2023) விசேட மதிய உணவு வழங்கப்பட்டது.
கழகத்தின் சமுக மேம்பாட்டுப்பிரிவின் ஊடாக இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆசியர்களான பூபாலன், ராமையா, லோகேஸ்வரி, தமிழ்ச்செல்வி ஆகியோர் கலந்து நிகழ்வினை சிறபித்திருந்தனர். இதன்போது 59 மாணவர்களுக்கான விசேட மதிய உணவு வழங்கப்பட்டது.