ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார் அவர்கள் தனது தந்தையாரான வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் ஏழாமாண்டு நினைவுதினத்தை முன்னிட்டு வழங்கிய 25,000/- நிதியில் திருகோணமலை, பாலையூற்றைச் சேர்ந்த வறுமைக்கோட்டின் கீழுள்ள தெரிவுசெய்யப்பட்ட பத்து மாணவர்களுக்கு இன்று (30.04.2023) கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
கழகத்தின் சமுக மேம்பாட்டுப்பிரிவின் ஊடாக பாலையூற்றில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் தோழர் அசோக், மாவட்ட அமைப்பாளர் தோழர் மதி, மாவட்ட பொருளாளர் தோழர் பகீர் மற்றும் தோழர்கள் வசந்தி, மோகன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.
இதன்போது அமரர் வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களுக்கான ஆத்மசாந்திப் பிரார்ந்தனை இடம்பெற்றதுடன், நிகழ்வின் இறுதியில் சிற்றுண்டி தேநீர் என்பனவும் வழங்கப்பட்டது.