2023 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பை திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை வீடுகளுக்குப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகளை கிராம உத்தியோகத்தர்கள் தற்போது முன்னெடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. படிவத்தை பூரணப்படுத்தி விரைவாக ஒப்படைக்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
வவுனியா – வெடுக்குநாறி மலையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட விக்கிரகங்களை மீண்டும் அங்கு பிரதிஷ்டை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வவுனியா நீதவான் தேவராசா சுபாஜினி முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெடுக்குநாறி மலையில் வழிபாடுகளை மேற்கொள்ள ஏற்கனவே நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், நேற்றைய தினம் அங்கு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
யாழ். கட்டுடை விநாயகர் முன்பள்ளிக்கு குடிநீர்த்தாங்கி பொருத்தி குடிநீர் விநியோகம் ஆரம்பித்து வைக்கப்பட்டதோடு முன்பள்ளி ஆசிரியர்களுக்கான தளபாடங்களும் வழங்கப்பட்டன. கட்டுடை கிராமத்தில் தேவையுடைய குடும்பமொன்றுக்கு கோழி வளர்ப்பிற்கான வாழ்வாதார உதவி வழங்கப்பட்டதோடு வயோதிபர் ஒருவருக்கு மெத்தையும் வழங்கப்பட்டது. மேலும் கட்டுடை ஞானவைரவர் சனசமூக நிலையத்தினை சுற்றியுள்ள வாய்க்கால் சுவர் கட்டுமானமும் நிறைவேற்றிக் கையளிக்கப்பட்டது.
இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொடவை கறுப்புப் பட்டியலில் இணைப்பதற்கு அமெரிக்கா எடுத்த தீர்மானம் கவலையளிப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கை வௌிவிவகார அமைச்சினால் கவலை வௌியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த தீர்மானத்தினால் ஆழ்ந்த கவலையடைவதாக அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிடம், வௌிவிவகார அமைச்சர் அலி ஷப்ரி தெரிவித்துள்ளார்.
மலையகம் – 200, இலங்கை மண்ணில் கால் பதித்த காலம் முதல், தமது அடிப்படையான வாழ்வுரிமைக்காக, கடந்த இருநூறு வருடங்களாக போராடி வரும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வரலாற்றை அலசி ஆராய்ந்து அதில் பாடங்களைக் கற்றுக் கொண்டு, நிரந்தரமான தீர்வுக்கான பாதையை உருவாக்க துடிக்கும் அடையாள வார்த்தை.
X-Press Pearl கப்பல் இலங்கை கடற்பரப்பில் மூழ்கியதால் ஏற்பட்ட சூழல் பாதிப்புகளுக்காக நஷ்ட ஈடு கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நேற்று(25) இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
26.04.1977இல் அமரத்துவமடைந்த தந்தை செல்வா (எஸ்.ஜே.வி. செல்வநாயகம்) அவர்களின் 46ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
இலங்கைக்கு வருகை தரும் இந்திய சுற்றுலாப் பயணிகளால் இந்திய ரூபாவை பயன்படுத்த முடியும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இந்திய வணிக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செயலமர்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
25.04.1985 இல் மரணித்த தோழர் நாதன் (தேவராஜ் ஜெயசிங்கம் – மன்னார்) அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கையை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், கத்தோலிக்க ஆயர்கள் பேரவையிடம் சமர்ப்பித்துள்ளார். கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் குருணாகல் மறைமாவட்ட ஆயர் ஹெரல்ட் அன்டனி ஆண்டகையிடம் அறிக்கை கையளிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.