உத்தேச பயங்கரவாத எதிரப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு, கிழக்கில் இன்று(25) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த முழுமையான கடையடைப்பிற்கு 07 தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்திருந்த நிலையில் வடக்கு, கிழக்கு தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், சிவில் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். Read more
பொதுவுடைமைவாதி, காந்தீய அமைப்பின் செயற்பாட்டாளர், ‘விடுதலை’ இதழின் ஆசிரியர், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் இராணுவத் தளபதி தோழர் பார்த்தன் (இராஜதுரை ஜெயச்சந்திரன்) அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….
சுவிஸ்லாந்தில் வசிக்கும் திரு திருமதி வசீகரா சுஜாவதி தம்பதிகள் தங்கள் புதல்வி கரிஸ்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அனுப்பி வைத்த 35,000/- ரூபாய் நிதியில் கழகத்தின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக முல்லைத்தீவு நாவற்காடு சந்திரன் முன்பள்ளி சிறார்களுக்கான பொருட்கள், வற்றாப்பளை அரும்பு மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர்க்கு 10 கதிரைகள் மற்றும் சிறுநீரக நோயாளர்கள் மூவருக்கான உலருணவுப் பொதிகள் என்பன இன்று (24.04.2023) திங்கட்கிழமை வழங்கிவைக்கப்பட்டன.
ஏப்ரல் 25ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பொது கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கோரி துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்
25 ம் திகதி வடக்கு கிழக்கில் நடைபெறவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கோரி வவுனியா நகர் பகுதிகளில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்
ஹம்பாந்தோட்டை கடற்பகுதியில் இன்று(24) அதிகாலை 12.45 அளவில் 4.4 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது ஹம்பந்தாட்டை பகுதியிலிருந்து 25.8 கிலோமீட்டர் தொலைவில் தென்மேற்கு கடலில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணிகயத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் பிரேம தெரிவித்துள்ளார்.
வெடுக்குநாறிமலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்காக பக்தர்கள் செல்வதை தடுக்கும் வகையில் எந்தவொரு அரச அதிகாரியும் செயற்படக்கூடாது என வவுனியா நீதவான் நீதிமன்றம் இன்று(24) உத்தரவு பிறப்பித்துள்ளது. வவுனியா வடக்கு, ஒலுமடுவிலுள்ள தொல்பொருள் சிறப்புமிக்க வெடுக்குநாறிமலை, ஆதிசிவன் ஆலயத்திலுள்ள விக்கிரகங்கள் அண்மையில் சேதமாக்கப்பட்டிருந்தன.
மட்டக்களப்பு எரிவில் பகுதியைச் சேர்ந்த வறுமைக்கோட்டின் கீழுள்ள 40 மாணவர்களுக்கு இன்று (23.04.2023) 120,000/- பெறுமதியில் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார் அவர்கள் தனது தந்தையாரான வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் ஏழாமாண்டு நினைவுதினத்தை முன்னிட்டு வழங்கிய நிதியில் இவ்வுதவி வழங்கப்பட்டது.
பாடசாலை போக்குவரத்துச் சேவைக்கான கட்டணங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கு இடையிலான அகில இலங்கை போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் ஹரிஸ்சந்திர பத்மசிறி இதனை இன்று(23) தெரிவித்தார். எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் 5 வீதம் தொடக்கம் 8 வீதத்தினால் கட்டண குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான நலன்புரி கொடுப்பனவுகளை வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் நிதி, பொருளாதார உறுதிப்பாட்டு, தேசிய கொள்கைகள் அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.