13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கும், இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கும் இந்தியாவின் உறுதிப்பாடு மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்த உறுதிப்பாட்டை வலியுறுத்தியுள்ளார். தம்மை சந்தித்த தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகளிடம் அவர் இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,கோவிந்தன் கருணாகரன், தர்மலிங்கம் சித்தார்த்தன்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் உட்பட்ட குழுவினர் உயர்ஸ்தானிகரை சந்தித்து தற்போதைய தமிழர் நிலைமை குறித்து கலந்துரையாடினார்கள்.
இதன்போது அவர்கள், இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் அபிலாஷைகள் மற்றும் அது தொடர்பான விடயங்களில் முன்னேற்றம் குறித்து உயர்ஸ்தானிகரிடம் விளக்கமளித்தனர்.