சுவிற்சர்லாண்ட் சூரிச் மாநிலத்தில் தொழிலாளர் தினமானது சுவிஸ் தொழில்சங்கங்கள், இடதுசாரி அமைப்புகள், முற்போக்கு முன்னணிகள், சமூக மேம்பாட்டு அமைப்புகள், மற்றும் உரிமைக்காய் போராடும் பல இன மக்களுடன் இணைந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழக கிளையினரும் இணைந்து நிகழ்த்தப்பட்டது. இவ்வூர்வலத்தில் இலங்கைத் தமிழ் மக்களின் விடுதலைக்கும் அனைத்து இன மக்கள் மீதான அனைத்து அடக்கு முறைகளையும் உடைத்தெறிய அணிதிரளவும் அனைத்துலக ஆதரவு கோரியும் அறைகூவல் விடுக்கப்பட்டது.
இவ் ஊர்வலம் சூரிச் Helvetia Platz இல் தொடங்கி Bellevueyplatz வரை சூறிச் நகர மத்தியினூடாக நகர்ந்து சென்றது.
இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து உணர்வுபூர்வ ஆதங்கத்தை தெரிவித்திருந்தனர்.
ஊர்வலத்தில் கலந்துகொண்டு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறியும் கொள்கை மீதான பற்றுதலுக்கு ஆதரவளித்த அனைத்துத் தோழர்கட்கும், ஆதரவாளர்கட்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் – சுவிஸ் கிளை.