தேசிய கொள்வனவு ஆணைக்குழுவிற்கும் நிதி ஆணைக்குழுவிற்கும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய கொள்வனவு ஆணைக்குழுவின் தலைவராக W.சுதர்மா கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். வர்ணகுலசூரிய ஐவன் திசேரா, D.A.பியசிறி தரணகம, சுமந்திரன் சின்னகண்டு, A.G.புபுமு அசங்க குணவங்ஷ ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

நிதி ஆணைக்குழுவின் தலைவராக சுமித் அபேசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

துவான் நளின் ஹூசைன்,  மேயன் வாமதேவன் ஆகியோர் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.