Header image alt text

தாயகக் குரல்

Posted by plotenewseditor on 5 May 2023
Posted in செய்திகள் 

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்பது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிப்புடன் உருவான தமிழ் அரசியல் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த கட்சிகளிடையே நீண்டகாலமாக நிலவி வந்த முரண்பாடுகளினால் உருவான புதிய அணி, நியாயப்படுத்தலுக்கு அப்பாற்பட்ட இணக்க அரசியல் காரணமாக கூட்டமைப்பின் மீது தமிழ் மக்களின் அதிருப்தி அதிகரித்திருந்த நிலையில் புதிய தலைமைத்துவத்தை வழங்கவென புதிய திசையில் அரசியல் பயணத்தை முன்னெடுக்க ஆயத்தமான அணி எனப் பல பரிமாணங்களைக் கொண்டிருந்தும், பெருமளவு தொழிலாளர் படையை கொண்டுள்ள தமிழர் தாயகத்தில் தொழிலாளர் தினத்தை குறிக்கும் செயற்பாடுகள் எதனையும் முன்னெடுத்திருக்கவில்லை.

Read more

பாராளுமன்ற பொது நிதிக்குழுவின் தலைவர் பதவியை நிரந்தரமாக ஒருவருக்கு வழங்காமல், தற்காலிகமாக ஒருவருக்கு வழங்குவது தொடர்பில் சர்வதேச பாராளுமன்ற சங்கத்திற்கு அறிவிக்கவுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். நேற்று (04) நடைபெற்ற தெரிவுக்குழு கூட்டத்தின் போது, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பாராளுமன்ற நிதிக்குழுவின் தற்காலிகத் தலைவராக நியமிக்கப்பட்டதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கூறினார். Read more

05.05.1999இல் வவுனியாவில் மரணித்த பளை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் தோழர் குணம் (வீரகத்தி குணரத்தினம் – திருநாவற்குளம்) அவர்களின் 24ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….

கிளிநொச்சி – ஆனையிறவில் போலி நாணயத்தாள்களுடன் பல்கலைக்கழக மாணவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்கிடமாக பயணித்த மோட்டார் சைக்கிளொன்றை சோதனைக்கு உட்படுத்திய போதே போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறினர். சந்தேகநபர்களிடமிருந்து 5000 ரூபா போலி நாணயத்தாள்கள் 250 கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் 500 ரூபா போலி நாணயத்தாள்கள் 27 கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். Read more