பிரித்தானிய விஜயத்தை நிறைவு செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(08) நாடு திரும்பியுள்ளார். மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவிற்காக ஜனாதிபதி பிரித்தானியா சென்றிருந்தார். இலண்டன் வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் நேற்று முன்தினம்(06) பிரித்தானிய மன்னராக மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு முடிசூடப்பட்டது.