Header image alt text

09.05.1985இல் வல்வெட்டித்துறையில் மரணித்த தோழர் சுகுணன் (சுவேந்திரன் – வல்வெட்டி) அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…..
கழகத்தின் ஆரம்ப அணியில் பயிற்சி பெற்ற இவர் , அசாத்திய துணிச்சல் மிக்க போராளியாவார். 1985.05.09ல் வல்வெட்டித்துறையில் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டபோது, நேரடி மோதலில் மரணமானார்.

கொழும்பு – துறைமுகத்துக்கு அருகே தீப்பிடித்து மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு கோரி இலங்கை அரசாங்கம் தாக்கல் செய்த வழக்கு சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று (9) முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இலங்கை அரசாங்கத்தின் சார்பில் சிங்கப்பூர் சட்ட நிறுவனம் ஒன்று இந்த வழக்கில் முன்னிலையாகவுள்ளது. Read more

எமது கட்சியின் உபதலைவர்களுள் ஒருவரும், கட்சியின் முன்னாள் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான (தோழர் பக்தன்) மகாதேவன் சிவநேசன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் இன்று…
மலர்வு – 1963.03.03
உதிர்வு –2021.05.09

Read more

பங்களாதேஸுடனான இருதரப்பு சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான முதல் கட்ட பேச்சுவார்த்தையை இந்த மாத இறுதியில் இலங்கை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. குறித்த சந்திப்பானது எதிர்வரும் 29 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக, ஜனாதிபதி செயலகத்தின் சர்வதேச வர்த்தக அலுவலக பேச்சாளர் கே.ஜே. வீரசிங்க தெரிவித்துள்ளார். மெய்நிகர் மூலம் நடைபெறவுள்ள இந்த சந்திப்பில், ஒப்பந்தம் குறித்த யோசனைகள் மற்றும் அதனை எட்டுவதற்கான இறுதி திகதி உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் எட்டப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. Read more

இலங்கையில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்காக உலக வங்கியுடன் கலந்துரையாடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.