கொழும்பு – துறைமுகத்துக்கு அருகே தீப்பிடித்து மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு கோரி இலங்கை அரசாங்கம் தாக்கல் செய்த வழக்கு சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று (9) முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இலங்கை அரசாங்கத்தின் சார்பில் சிங்கப்பூர் சட்ட நிறுவனம் ஒன்று இந்த வழக்கில் முன்னிலையாகவுள்ளது.
கடந்த 2021 மே 20 ஆம் திகதியன்று இந்த கப்பல் தீ விபத்து, அண்மைய காலங்களில் இடம்பெற்ற மிகப்பெரிய கடல்சார் சுற்றுச்சூழல் விபத்தாகக் கருதப்பட்டுகிறது. எனினும், இது தொடர்பான வழக்குத் தொடருவதில் தாமதம் குறித்து விமர்சனங்கள் எழுந்துவந்தது.
இந்த வழக்கு அண்மையில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
நிபுணர் ஆய்வு அறிக்கையின்படி, மொத்த சேதம் 6.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.இந்த நிலையில், இதற்கான இழப்பீட்டுத் தொகையைப் பெற சிங்கப்பூரில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது