ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினமும் தொடரவுள்ளது. இந்தச் சந்திப்பில், அதிகாரப் பகிர்வு தொடர்பாக, பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. நேற்றைய தினம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், வடக்கு, கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில், இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், தீர்க்கமான முடிவுகள் எவையும் எட்டப்படவில்லை
குறித்த சந்திப்பில், நல்லிணக்கப் பொறிமுறைகள், அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விவகாரம் என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. எனினும், குறித்த சந்திப்பில், தீர்க்கமான முடிவுகள் எவையும் எட்டப்படவில்லை.