சர்வதேச அன்னையர் தினம் இன்றாகும்(14). ஒவ்வொரு வருடத்திலும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. உலகமே இன்று அன்னையர் தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும் போது, எமது நாட்டில் 6215 தாய்மார் முதியோர் இல்லங்களில் வசிப்பதாக தேசிய முதியோர் செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 5781 பேர் தனியார் முதியோர் இல்லங்களிலும் 434 பேர் அரசாங்கத்தின் கீழ் இயங்கும் முதியோர் இல்லங்களிலும் தமது வாழ்நாளை கழிப்பதாக தேசிய முதியோர் செயலாளர் அலுவலக பணிப்பாளர் கபில லெனரோல் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளைப் போன்ற சிந்தனைகளைக் கொண்ட வயதான தாய்மார், முதியோர் இல்லங்களிலும் சொந்த வீடுகளிலும் சிறை வைக்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடிவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே பிள்ளைகள் இது தொடர்பில் சிந்தித்து செயலாற்றுவது முக்கியானதெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.