மாகாணங்களுக்கிடையில் சேவையில் ஈடுபடும் பஸ்களை உரிய இடங்களில் மாத்திரம் நிறுத்துவது தொடர்பான முன்னோடி வேலைத்திட்டமொன்று இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  கொழும்பு முதல் காலி வரையிலான மார்க்கத்தில் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா கூறினார்.

மாகாணங்களுக்கிடையில் சேவையில் ஈடுபடும் பஸ்களை இன்று(15) முதல் மஞ்சள் நிற அறிவித்தல் பலகை காணப்படும் இடங்களில் மாத்திரமே நிறுத்த முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் திட்டமிடல் பிரிவு பணிப்பாளர் ஆலோகா கருணாரத்ன குறிப்பிட்டார்.