Header image alt text

19.05.1980 இல் மரணித்த கழகத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும், ஏதிலிகள் மறுவாழ்வுக் கழகம் மற்றும் காந்தீயம் ஆகிய அமைப்புக்களின் செயற்பாட்டாளருமான தோழர் ஊர்மிளாதேவி அவர்களின் 43ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று……

Read more

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கையை அனுப்ப வலியுறுத்தி வரும், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் டெபோரா ரோஸ் மற்றும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் பில் ஜோன்சன் ஆகியோர் ஈழத் தமிழர்களுக்கு ‘ஜனநாயக ரீதியாகவும் சமத்துவமாகவும் பிரதிநிதித்துவம்’ மற்றும் ‘நீடித்த அமைதியான அரசியல் தீர்வுக்கு’ பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற இரு கட்சி தீர்மானத்தை நேற்று முன்வைத்துள்ளனர். ஆயுதப் போரின் இறுதி வாரங்களில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் பலியாகி 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தத் தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது. Read more

யுத்த வெற்றியின் 14 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டுஇ கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று வெளியிட்ட அறிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கம் மீண்டும் கனடாவுடனான இராஜதந்திரப் போரில் இறங்கியுள்ளது. நேற்றைய தினம் கனடா பிரதமர் 14 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் தமிழர் இனப்படுகொலை நினைவு தினம் மற்றும் யுத்தம் நிறைவடைந்த தினத்தை நினைவுகூரும் வகையில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து உள்நாட்டில் நல்லிணக்கச் செயற்பாட்டிற்கு உதவாது எனக் கருதும் கனேடிய பிரதமரின் அறிக்கையை இலங்கை கண்டிப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். Read more

தலைமன்னாரில் மூன்று மாணவிகளை கடத்த முயற்சித்ததாக கூறப்படும் சந்தேகநபர்கள் இருவர் அடையாளங்காணப்பட்டுள்ளனர். மன்னார் நீதவான் முன்னிலையில் நேற்று (18) நடைபெற்ற அடையாள அணிவகுப்பின் போது, மூன்று சிறுமிகளாலும் சந்தேகநபர்கள் அடையாளம் காட்டப்பட்டதாக பொலிஸார் கூறினர். இதனையடுத்து, சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். Read more

தகுதியற்ற  பிரதேச சபை செயலாளர்கள் மற்றும் மாநகர ஆணையாளர்களுக்கு பதிலாக புதிய அதிகாரிகளை நியமிக்கும் நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. தகுதியற்ற சுமார் 70 அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர கூறியுள்ளார். அவர்களுக்கு பதிலாக தகுதியான அரச அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். Read more